றீஜன்ட் பார்க் சமூகத்திற்கான பதில் அறிக்கைச் சுருக்கம்: டானியல்ஸ் டுஈஸ்ட் கொண்டமினியம் கட்டுமான ஸ்தலத்தில் யூன் 26 2020 அன்று நடைபெற்ற வெறுப்புக் குற்றத்திற்கான பதிலிறுப்பு

உள்ளடக்க எச்சரிக்கை

இந்தச் சுருக்க அறிக்கை மிகவும் குழப்பமுறச்செய்யும் இனவெறுப்பு மற்றும் இனவெறுப்பு வன்முறை தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

பின்புலமும் சந்தர்ப்பசூழ்நிலையும்

டண்டாஸ் தெரு கிழக்கு மற்றும் சுமக் தெரு மூலையில் அமைந்துள்ள றீஜன்ட் பார்க்கில் டானியல்ஸ் கட்டுமான ஸ்தலத்தில் யூன் 26, 2020 அன்று ஒரு தொங்கும் சுருக்குக்கயிறு காணப்பட்டது. இந்த வெறுப்புணர்வுக் குற்றச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்த அடுத்த வாரத்தில் றீஜண்ட் பார்க் அயலோர் அமைப்பு (RPNA) டானியலஸ் நிறுவனத் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மிச்சல் கோகன் என்பவரை சம்பவத்திற்கான  டானியல்ஸ் நிறுவனத்தினது பதிலிறுப்புத் தகவலை வேண்டிக்கேட்டு அணுகியது. மேற்கூறிய இந்த வேண்டுகோளிற்கான பதிலிறுப்பாக, டானியல்ஸ் நிறுவனம் ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்தப் பத்திரம் அந்த அறிக்கையின் சுருக்கமாகும்.

டானியல்ஸ் நிறுவனம் எவ்வாறு அமைப்புமுறையான இனவெறுப்பினை எதிர்கொள்கிறது

கனடா உட்பட, வட அமெரிக்காவில் கூறப்படும் கறுப்பினத்திற்கெதிரான இனவெறுப்பின் சரித்திரத்தினடிப்படையில், டுஈஸ்ட் கட்டுமான ஸ்தலத்தில் இடம்பெற்ற வெறுப்புக் குற்றத்திற்கான பதிலிறுப்பு – பன்முகத்தன்மைகொண்டதாகவும், ஒருங்கிணைப்புக் கொண்டதாகவும் மிக முக்கியமாக தொடர்ந்து நிலைப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதை  டானியல்ஸ் நிறுவனம் விளங்கிக்கொள்கிறது. யூன் 26, 2020 அன்று நடைபெற்ற வெறுப்புக் குற்றத்துக்கான நடவடிக்கையை எடுக்கும்பொருட்டு, டானியல்ஸ் நிறுவனம் சம்பவத்திற்கான நேரடி நடவடிக்கையுடன் உள்ளகக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் பற்றியும் சிந்திப்பதுடன், கட்டுமானத்துறை பூராவும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டும் உள்ளனர்.

வெறுப்புக் குற்றச் சம்பவத்திற்கான பதிலிறுப்பு

 • பொதுசனப் பிரகடனம்: வெறுப்புணர்வுச் சாதனம் கண்டறிந்த சில மணிநேரங்களில், டானியல்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பொறுப்பாளருமான மிச்செல் கோஹன் ஒரு பொதுசனப் பிரகடனத்தை வெளியிட்டார். பொதுசனப் பிரகடனத்தில், மிச்செல், சம்பவத்தினை வெறுப்புக் குற்றச்செயல் எனக் கருதுவதில் சந்தேகமின்றியிருந்ததுடன், இனத்துவேசம், குரோதம் மற்றும் வெறுப்பிற்கு டானியல்ஸ் நிறுவன கட்டுமானத் ஸ்தலங்களிலும் முழு நிறுவனத்திலும்கூட துளியும் இடமில்லை என உறுதிப்படுத்தியிருந்தார்.
 • சகல – தொழிலாளர் சந்திப்பு: வெறுப்புக் குற்றச் சம்பவம் டுஈஸ்ட் ஸ்தலத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து வந்த முதல் வேலைநாளிலிருந்து (திங்கள், யூன் 29, 2020) ஒரு தொடரான சகல -தொழிலாளர் சந்திப்புகளை அதன் எல்லா கட்டுமான ஸ்தலங்களிலும், வேறு எந்த வேலையும் தொடங்குமுன்னர் டானியல்ஸ் நிறுவனம் முன்னெடுத்தது. இந்தப் பேச்சுகளின் உள்ளடக்கம், டானியல்ஸின் வெறுப்புக் குற்றச்செயல் நடைபெற்றமை பற்றிய விரக்தியையும், இனவாதத்துக்கோ வெறுப்புணர்வுக்கோ தமது கட்டுமான ஸ்தலங்களிலோ நிறுவனத்தினுள்ளேயோ துளியும் இடமில்லை என்பதையும் மீளுறுதி செய்தது. அத்துடன் இனவாதத்துக்கும் குரோதத்திற்கும் எதிரான தமது பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்தியது. 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இந்த சகல –தொழிலாளர் சந்திப்புகளில் பங்குபற்றினர்.
 • விசாரணைகள்: டுஈஸ்ட் கட்டுமானத்தலத்தில் வெறுப்புணர்வுச் சாதனம் கண்டறியப்பட்ட உடனேயே, டானியல்ஸ் நிறுவனம் ரொறோன்ரோ பொலிஸ் சேவைகளுடன் ஒரு முறைப்பாட்டைச் செய்ததுடன் சுயாதீனமான, வேலையிடத்தில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு விடயங்ளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநிபுணர்களின் தலைமைத்துவத்தின்கீழ் சொந்த உள்ளக-விசாரணையையும் ஆரம்பித்தது.
 • சமூக நடவடிக்கைகளில் பங்கெடுப்பு: இச் சம்பவம் நடந்ததிலிருந்து, டானியல்ஸ் நிறுவனம் கறுப்பு இன சமூகத்தினருடன் ஒன்றிநிற்பதை வெளிப்படுத்துமுகமாகவும் கட்டுமானத்துறையிலோ அல்லது முழுச்சமூகத்திலோ உள்ள அமைப்புமுறையான இனவாதம் பற்றிய கவனத்தினை ஈர்க்குமுகமாகவும் சமூக வதிவாளர்கள் ஒழுங்கு செய்யும் சமூக நிகழ்வுகளுக்கு ஆதரவளித்திருக்கிறது.
 • ஸ்தலத்தில் உள்ள அடையாளங்கள் மற்றும் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள்: டானியல்ஸ் நிறுவனம் இனவாரியான தொழிலாளர்களை கட்டுமான ஸ்தலங்களில் பாரபட்சம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க மேலதிக நடவடிக்கைகளை எடுக்கின்றது. எல்லாக் கட்டுமான ஸ்தலங்களிலும் எல்லா தொழிலாளர்களுக்கும் தெளிவான செய்திகள் மற்றும் தமது செயற்திட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் தரத்துடன்கூடிய நடத்தைகள் பற்றிய முன்னேற்றப்பட்ட பயிற்சி என்பனவற்றையும் இவை உள்ளடக்குகின்றன. மேலும், நாம் ‘க்றைம் ஸ்ரோப்பர்ஸ்’ என்ற குற்றவியல் தடுப்பு நிறுவனத்தினருடன் ஒன்றிணைந்து டுஈஸ்ட் வெறுப்புக் குற்றச்செயல் பற்றிய தகவல் தெரிந்த எவரையும் அநாமதேயமாக அறிவிப்புத்தரும்படி ஊக்குவிக்கிறோம்.
 • கலைவழி சமூக நீதி மற்றும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தி: சமூக நீதிக்கு உறுதுணையான ஒரு முக்கிய கருவியாகக் கலை அடிக்கடி உதவியுள்ளது. எமது உள்ளூர் கலையைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பாகமாக – கறுப்பு, ஆதிவாசி, வேறு நிறத்தவர்களிலுள்ள கலைஞர்கள் – கலைத் தொகுப்புகளை றீஜன்ட்பார்க் மற்றும்/அல்லது கிழக்கு கீழ்நகரப்பகுதிகளிலிருந்து பெற்று வெளிப்படையாக எல்லோரும் பார்க்கக்கூடிய டுஈஸ்ட் அலுவலக வரவேற்பறையில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த நாம் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.

 அமைப்பு – மட்டத்திலான பதிலிறுப்பு

 • பாரபட்சத்திற்கெதிரான கொள்கை: வேலையிடத்தில் வன்முறை மற்றும் தொல்லைப்படுத்தல் கொள்கைத்திட்டம் டானியல்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே உள்ளது எனினும், குறிப்பாக வன்முறைக்கெதிரான கொள்கைத்திட்டம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
 • உள்ளடக்குதலும் உரிமையுடையதாக இருத்தலும் பற்றிய கருத்துக்கணிப்பு: தகவல் சேகரிப்பு என்பது சமத்துவமான உள்ளகக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை விருத்திசெய்வதில் மிக முக்கியமானதென டானியல்ஸ் நிறுவனம் அங்கீகரிக்கின்றது. அதன்பயனாக எமது ‘மக்கள் மற்றும் கலாசாரக் குழு’ டானியல்ஸ் நிறுவனத்தில் உரிமையுள்ளதாக இருத்தல்பற்றிய தகவல் சேகரிப்புப் பெறவென ஒரு கருத்துக்கணிப்பினை உருவாக்கி உள்ளது. இதனால் டானியல்ஸில் அனைவரும் கொள்கைகள், செயன்முறைகள் மற்றும் பயிற்சி என்பவற்றுடன் முக்கியமாக பரவலாக்கம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் போன்றவற்றாலும் பயனடையக்கூடியதாயுள்ளது.
 • பணிக்கமர்த்தல் கொள்கைகள்: எந்தவொரு வேலைவாய்ப்புக்காயினும் நேர்முகம் காணலுக்காகத் தெரிவுசெய்யப்படும் இறுதி மூன்று விண்ணப்பதாரிகளில் குறைந்தது இருவர் சமவாய்ப்பு – நாடும் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதை பணிக்கமர்த்தும் முகாமையாளர்கள் உறுதிசெய்யும் வகையில் டானியல்ஸ் நிறுவனத்தின் ‘மக்கள் மற்றும் கலாசாரக் குழு’ கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.
 • வட கறுப்பினத்தவர் முன்னெடுப்பு: கறுப்பினத்தவருக்கான அமைப்புமுறை இனவாதத்திற்கெதிரான கனேடிய அமைப்பினால் தலைமைத்துவம் வகித்து நடத்தப்படும் வட கறுப்பினத்தவர் முன்னெடுப்பில் டானியல்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் கட்டமைப்பினை மாற்றியமைக்கும் வகையில் கறுப்பினக் கனடியர்களுக்கு எதிரான அமைப்புமுறை இனவாதத்திற்கெதிர்ப்பினைக் கைக்கொள்ளும் முக்கிய தொழில்துறை தலைவர்களைப் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்கச் செய்வதே இனவாத வட கறுப்பினத்தவர் முன்னெடுப்பினது நோக்கமாகும்.
 • ரொறொன்ரோ பெருநகர யூனைரட் வே – உள்ளூர் உள்ளடக்க பொருளாதார வாய்ப்பு (ILEO) முன்னெடுப்பு: டானியல்ஸ் நிறுவனம் யுனைரட்வேயினது ILEO சாசனத்திலும் கையெழுத்திட்டுள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகத்தில் (ஜீரிஏ) பொருளாதார செழிப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து அயலிட மட்டத்தில் பொருளாதார வீரியத்தை நிரந்தரமாக்க தனியார், பொதுசன, சமூக நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கின்றது. ILEO சாசனம் பின்வருவனவற்றிற்கான பொறுப்புணர்வை ஏற்கிறது. வாழ்வாதார சம்பளம், சமூக முயற்சிவழிப்பெறுதல்கள், தொழிலாளர் படை விருத்தி மற்றும் உள்ளடங்கல் கொண்ட பணிக்கமர்த்தல் நடைமுறைகள். இந்தவிடயங்களில் உள்ள முன்னேற்ற அறிக்கைகளை வருடாந்தம் சமர்ப்பிக்குமாறு டானியல்ஸ் உட்பட்ட கைச்சாத்திட்ட நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன.
 • மனிதவளங்கள் தொகுதி மேம்படுத்தல்: தரவுகளைக் கண்டறிதல் மற்றும் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் ஒரு புதிய மனிதவளங்கள் தொகுதிமுறைமையில் டானியல்ஸ் நிறுவனம் முதலீடு செய்கிறது. குறிப்பாக, இந்தப் புதிய முறைமையானது குடிப்பரம்பல் தகவல்கள்,  முன்னேற்றங்கள் சார் தரவுகளைக் கண்டறியக்கூடிய திறன் கொண்டதாயிருக்கும்.  
 • பரவலாக்கம், சமத்துவம், உள்ளடக்கப் பயிற்சிகள்: உணர்வுபூர்வமற்ற குறை மற்றும் பயிற்சியை நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உட்பட எல்லா டானியல்ஸ் தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக வழங்க ஆரம்பித்துள்ளது.
 • வேறு பரவலாக்கம், சமத்துவம், உள்ளடக்க முன்னெடுப்புகள்: பரவலாக்கம், சமத்துவம், உள்ளடக்கப் (DEI) பயிற்சி என்பவற்றுக்கும் மேலாக டானியல்ஸ் நிறுவனத்தின் ‘மக்கள் மற்றும் கலாசாரக் குழு’ வேறு DEI முன்னெடுப்புகளை, ஒரு DEI சபை மற்றும் DEI கூட்ட நிகழ்வுகள் உட்பட, தொழிலாளர்களுக்கு உள்ளக கலந்துரையாடலுக்கு இடமளிக்குமுகமாக ஆரம்பித்துள்ளது. 

துறைசார்ந்த சகபாடிகளுடனும் நேரடி ஈடுபாடுகொண்டவர்களுடனுமான கலந்துரையாடலும் ஒருங்கிணைப்புகளும்

 • ஒன்ராறியோ வதிவிட கட்டுமான சபை (RESCON) யினது இனவாதத்திற்கெதிரான முன்னெடுப்புகள்: இனவாதத்துக்கெதிரான வட்டமேசை மாநாடு, எங்கும் இனவாதத்திற்கெதிரான கட்டமைப்புப் (CARE) பிரசாரம் உட்பட RESCON இனது இனவாதத்திற்கெதிரான முன்னெடுப்புகளில் டானியல்ஸ் நிறுவனம் துடிப்புடன் பங்குபற்றுகிறது.
 • ரொறோன்ரோ சமூக நலன்கள் வலையமைப்பு (TCBN): டானியல்ஸ் நிறுவனம், TCBN உடனான சமத்துவம் கோரும் குழுக்களைச் சேர்ந்த தனிநபர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த நடைமுறைகள் பற்றிய கலந்துரையாடல்கள் உட்பட, முறைசார் இனவாத முன்னெடுப்புகளில் பங்குபற்றுகிறது.
 • கட்டடத் துறை மற்றும் நில அபிவிருத்தி அமைப்பு (BILD) முன்னெடுப்புகள்: ரொறொன்ரோ பெரும்பாகக் கட்டடத்துறை, நில அபிவிருத்தித் துறைகளின் குரலான BILD முன்னெடுப்புகளின் கலந்துரையாடல்களில் டானியல்ஸ் நிறுவனம் துடிப்புடன் பங்குபற்றுகின்றது. இந்தப் பங்குபற்றலின் முக்கிய பயன் என்பது பரவலாக்கம், சமத்துவம், உள்ளடக்க சபையினது உருவாக்கமாகும்.  

ஆங்கிலத்தில் கிடைக்கப்பெறும் முழு அறிக்கையின் பிரதியொன்றைப் பெற, டானியல்ஸ் கூட்டுத்தாபன சமூக பங்காளிகள் முகாமையாளர், ஃபற்றிமா சாயா அவர்களுக்கு பின்வரும் மின்முகவரியில் மின்னஞ்சல் அனுப்புங்கள்: fsaya@danielscorp.com